மதுரை : சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்கு நீர் மாலை எடுப்பதற்காக கிராம மக்கள் மயானத்துக்கு செல்லும் பாதையில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழாயில் குளித்து நீர் மாலை எடுத்து வந்தனர். இதனால், பொதுமக்களுக்கு அசௌகர்யமான சூழ்நிலை இருந்து வந்தது. இதனால், கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் குளியல் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன் பேரில், கிராமப் பொதுமக்கள் வசதிக்காக வைகை ஆற்றுக்குச் செல்லும் பாதையில் குளியல் தொட்டி அமைப்பதற்கு ஒன்றிய கவுன்சிலர் நிதியில் சுமார் 2 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுன.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குளியல் தொட்டி கட்டாமல் தடைபட்டு வருகிறது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக ஏற்கனவே, குளியல் தொட்டி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குளியல் தொட்டி கட்டாமல் காலம் கடந்து வருகிறது. இதனால், கிராம பொதுமக்களுடைய தேவைக்கு குளியல் தொட்டி கட்டாமல் காலம் தாழ்த்தி வருவது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. உட்கட்சி பூசலால் ஒரு சிலரின் எதிர்ப்பால் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய திட்டம் பயன்படாமல் போய்விடுமோ என்று கிராம மக்கள் மிக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ அரசு திட்டம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டால், அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல் அந்த இடத்தில் குளியல் தொட்டி கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி