சிவகங்கை : மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ,மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் CM துரைஆனந்த் அவர்கள், சிவகங்கை நகர் வார்டு எண் : 25 ,26 ஆகிய வார்டுகளில் ஆதி திராவிடர்கள் அதிக அளவில் வசிப்பதாக கருத்தில் கொண்டு அந்த வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாய கூடம் அமைத்து தரும்படி கோரிக்கைகளை வைத்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி