திருவள்ளூர் : மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு அரியன் வாயல் பகுதியில் பகுதி சபா கூட்டத்தில் உழைக்கும் மகிளருக்கு மாதாந்தோறும் ஆயிரம் ருபாய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழக அரசு கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டம் போல் நகர் பகுதிகளிலும் பகுதி சபா நடத்தி மக்களின் குறைகளை தீர்வு காணும் வகையில் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளின் துணை இயக்குநர் ஜெயக்குமார் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு வழிகாட்டுதலின் படி செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பகுதி சபா கூட்டம் மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு அரியன் வாயல் பகுதியில் நடைபெற்றது.
வார்டு உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் அன்பரசன் மேற்பார்வையில் வார்டு பகுதியின் தேவைகள் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக அரியன் வாயல் பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் முறையான கழிவு நீர் கால்வாய் வசதிகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் சமுதாயகூடம் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம், துணை சுகாதார நிலையம், அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி கண்காணிப்பு கேமரா அமைத்தல். பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்கங்கள் அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்குதல், அரியன் வாயல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசிலுக்கு தீர்வு காண சாலை விரிவாக்கம் அமைத்தல்.
சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துதல், டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தீர்மானங்களும் மகளிருக்கு உதவித்தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்டார தலைமை மருத்துவர் முஹம்மது அசீன் கிராம நிர்வாக அதிகாரி அம்சா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாலா, அங்கன்வாடி ஆசிரியர் ரகுமா பீ நியாய விலைக்கடை ஊழியர் நர்மதா உள்ளிட்ட பல்துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்களின் துறைகளின் செயல்பாட்டை விளக்கி பேசினர். இதில் பகுதி சபா உறுப்பினர்கள் சைய்யது அலி அன்பரசன் மஜித் சாதிக் அப்துல் சமத் சாதிக் சாகுல் பாரூக் கமாலுத்தின் அசாருத்தின் ரபி சைய்யது அகமது யுவராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு