சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாவது சிறப்பு மருத்துவ முகாம் (22.09.2023) அன்று தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் முகாம் நடைபெற உள்ளது. டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அச்சிறப்பு முகாமில் மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) விண்ணப்பம் பெறுதல் மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த (24.08.2023) அன்று சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, வருகின்ற (22.09.2023) அன்று தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் முகாம் நடைபெற உள்ளது. மேற்கண்டவாறு நடைபெறவுள்ள இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெறுவதற்கு ஏதுவாக. பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (6), ஆதார் அட்டை நகல், மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற UDID அட்டை முக்கியமான ஆவணமாக கருதப்படுவதால், இது நாள்வரை UDID அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக ஏற்கனவே மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெற்று பயனடையும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை இணைக்காமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அனுப்பப்பட்டு வந்த பராமரிப்பு உதவித் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகலினை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் முகாம் நடைபெறும் நாளில் ஒப்படைத்து பராமரிப்பு உதவித்தொகையினை தொடர்ந்து பெற்று பயன்பெறுவதற்கும் ஏதுவாக இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி