விருதுநகர் : காரியாபட்டி அருகே ஸ்ரீ பூரண புஷ்கலாம்பிகை அய்யனார் சுவாமி, ஸ்ரீ கருப்பண்ண சுவாமி மற்றும் ஸ்ரீ வடக்குவாச்சி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணர் முடியனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூரண புஷ்கலாம்பிகை அய்யனார் சுவாமி, ஸ்ரீ கருப்பண்ண சுவாமி மற்றும் ஸ்ரீ வடக்குவாச்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக ,தேவதா அனுக்ஞை, எஜமான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாயவசனம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை, வேதிகா அர்ச்சனை, ஜெபா ஹோமங்கள், பூர்ணாஹூதி, இரண்டாம் கால கோ பூஜை, யாகசாலை பூஜை, மகாலட்சுமி பூஜை, தீபாராதனை, போன்ற சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் யாத்ராதானம், குடம்புறப்பாடு ஆகி கோயிலை சுற்றி வந்து அய்யனார் சுவாமிக்கும் கருப்பணசுவாமி மற்றும் வடக்குவாச்சி அம்மனுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆறடி உயரம் உள்ள கருப்பணசாமி சிலைக்கு சந்தனம், பன்னீர், இளநீர், பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில், மல்லாங்கினறு, முடியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி