திண்டுக்கல் : பழனி திருக்கோவில் முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் உதவி ஆணையர் லட்சுமியை, கண்டித்து கண்டன பேட்ஜ் அணிந்து பணி மேற்கொண்டுள்ளனர். பக்தர்களிடம் பணம் வாங்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் மன்னிப்பு கேட்க சென்றபோது, உதவி ஆணையர் லட்சுமி, தொழிலாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதை கண்டித்து 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன பேட்ஜ் அணிந்து பணி மேற்கொண்டுள்ளனர்.டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் ஊராட்சியாக பாறைப்பட்டி ஊராட்சி விளங்குகிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் தாலுகா பாறைப்பட்டி ஊராட்சியில் உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் சாக்கடையை ஒட்டி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சாக்கடை நீருடன் குடிநீர் ஒன்றாக கலந்து வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை நீரை கடத்த வலியில்லாமல் தேங்கி கிடப்பதால் டெங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகுகின்றன. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகமாகவே உள்ளது. இது குறித்து, பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி