திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் டெங்கு விழிப்புணர்வு குறித்த பயிற்சி நடைபெற்றது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை முன்னிட்டு அதனை தடுக்கும் விதத்தில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு காய்ச்சல் உற்பத்தியாக்கும் ஏடிஸ் கொசுக்கள் குறித்தும், அதற்கு முன்னதாக தண்ணீரில் உருவாகக்கூடிய லார்வாக்கள் குறித்தும் டெங்கு கொசு உற்பத்தியாகும். இடங்கள் குறித்தும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் காணொளி காட்சி மூலமாக விளக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி துவக்கி வைத்த இந்த பயிற்சி அரங்கத்தில் மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் சக்திவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிசங்கர், சுகாதார ஆய்வாளர் அப்துல் வகாப் மற்றும் ரோகித் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சி அரங்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார் ,சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் கதிரவன், எம்.கே.தமின்ஷா,வெற்றி எனும் ராஜேஷ், அன்பு, மகாலட்சுமி பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிருளப்பாக்கம் உஷா கணேசன், வல்லூர் உஷா ஜெயகுமார், துணைத்தலைவர் இலக்கியா ராயல், சமூக ஆர்வலர் முகம்மது அலவி, உறவு அறக்கட்டளை இயக்குனர் சி.எம்.ரமேஷ், ஊராட்சி செயலர்கள் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு