திருவள்ளூர் : மீஞ்சூர் பிடி.ஒ ஆபிஸ் முதல் மேலூர் வரை உள்ள நெடுஞ்சலை கனரக வாகனங்களால் சேதமடைந்து குண்டும் குழியுமாய் பொதுமக்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தினார். இந்நிலையில் முதல்கட்டமாக பழுதடைந்த சலையை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. அந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள், ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும் மண் தூசி ஆகியவற்றை கட்டுப்படுத்த தினமும் தண்ணீர் தெளிக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மீஞ்சூர் பேரூராட்சி துணை தலைவர் அலெக்சாண்டர் வார்டு உறுப்பினர்கள் அபுபக்கர் ,பரிமளா, அருண்குமார், மோனிகா, ராஜேஸ், சமூக ஆர்வலர்கள் குரு சாலமோன் ஆண்ட்ரோஸ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு