இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாலைகளில் சுற்றித் திரியும் இடையூறு மற்றும் விபத்துகள் கால்நடைகளால் போக்குவரத்துக்கு ஏற்படுவதாலும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாலும் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தெருக்கள் மற்றும் சாலைகளில் விடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கால்நடை உரிமையாளர் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபடும் கால்நடை உரிமையாளர்களது கால்நடைகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஏலமிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி