திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவெள்ளைவாயல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 110மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் அனைத்து மாணவர்களும் +2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு மாதந்தோறும் 1000ரூபாய் வழங்கி வருவதையும் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களின் கல்விக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வரும் நிலையில் மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயலூர் கோபி, திரு. வெள்ளைவாயல் முத்து , பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பலதா, தி.மு.க நிர்வாகிகள் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் வாயலூர் கு. தசரதன், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதி நிதி காட்டூர் A. முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீஞ்சூர் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், வல்லூர் நந்தா , மற்றும் ஆசிரியர்கள் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு