சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் (22.9.23) அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் H. ராஜா தரம் தாழ்ந்து பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் நகர் கழக செயலாளர் நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் அவர்கள், புகார் மனு அளித்தார் உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், ஆயுப்கான், ராமதாஸ், விஜயகுமார், சி.எல். சரவணன், மகேஷ், காந்தி, பிரேம் மதியழகன், கார்த்திகேயன், வழக்கறிஞர் ராஜா அமுதன், சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சதீஷ்குமார், நாச்சியப்பன், திருநாவுக்கரசு இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி