கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இன்று மகளிர் உரிமை தொகைக்கான ஏடி.எம் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 500 மகளிருக்கு ஏடி.எம் கார்டுகள் வழங்கினார்.மேலும்,கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை, மாற்றுத்திறனாளின் நலத்துறை,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை,கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 3,642 பயனாளிகளுக்கு 42 கோடி மதிப்பீட்டிலான டிராக்டர் இயந்திரங்கள்,அதி திறன் மின் மோட்டார்கள், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய ஆவின் பாலகம், தொலைபேசி, போன்ற நலத்திட்டங்களை வழங்கி,நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது மொபைல் நிருபர்
அ.சுனில் குமார்