விருதுநகர் : கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவ அணி சார்பாக,
காரியாபட்டி அருகே கல்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறறது. நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ் தலைமை வகித்தார். காரியாபட்டி மேற்கு ஒன்றியச்செயலாளர். கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன், கல்குறிச்சி மாவட்ட மருத்துவ அணி தலைவர் செல்வராணி, துணை செயலாளர் டாக்டர். அருண்குமார் , அமைப்பாளர்கள் டாக்டர் சண்முகராஜன், கிருஷ்ணகுமார், ராஜா, சுகாதார மேற்பார்வையாளர்கள் சேதுராமன், சின்னசாமி மற்றும் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் தங்ககுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி