தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 2024 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் மிகக் கவனமாக கண்காணிக்க வேண்டும். காவல்துறையில் உள்ள ஆளிநர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையின் மாவட்ட அலுவலர்கள், ஊடகங்களுடன் சரியான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுடன், குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உள்துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப.,காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப.,சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சந்தீப்ராய் ரத்தோட், இ.கா.ப.,தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப.,ஆவடி மாநகர காவல் ஆணையர் திரு. கி. சங்கர், இ.கா.ப.,காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது மொபைல் நிருபர்
அ.சுனில் குமார்