திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியில் குழந்தை மேயப்பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022 -2023 காண ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டது. இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் தலைமை தாங்கி பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பள்ளி மாணவ மாணவியர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா ரமேஷ், ஊராட்சி செயலாளர் எஸ்தர், வார்டு உறுப்பினர்கள் உமாசங்கர், ராஜ், பாபு, சிந்து சேகர், முருகன், கலா மோகன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தநாயகி மற்றும் கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு