திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய கல்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி புதிய கட்டிடம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழாவை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார். அதன் நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ் ராஜ், கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, துணை தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா துரைராஜ், துணைத் தலைவர் பொன்னி முத்துக்குமார், கிளைக் கழக செயலாளர் வி.எஸ்.பாலகணபதி, ஆர். ஏழுமலை, இளைஞர் அணி அமைப்பாளர் கோபி, உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கட்சியின் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஒப்பந்ததாரர் குமார் செய்திருந்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு