திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு அரியன் வாயல் பகுதியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்து முகாம். மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு உறுப்பினர் அபுபக்கர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் தலைமை மருத்துவர்கள் முஹம்மது அசீன் மகேந்தரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராய் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். அரியன் வாயல் பல்வேறு சிகிச்சைகள் 20 க்கும் மேற்பட்ட மருத்தவர்கள், சித்தா யுனானி கண் காது மூக்கு தொண்டை எலும்பு கர்ப்பிணிகள் காசநோய் எக்ஸ்ரே எழும்பு மனநலம் இரத்த அழுத்தம் சர்க்கரை குழந்தைகள் நலன் மக்களை தேடி மருத்தவம் பிசியோ தரபி என பல்துறைகளின் மூலம் மருத்தவர்கள் பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் அங்கன் வாடி மூலம் அனைவருக்கும் சத்துமாவு கஞ்சி கொழுக்கட்டை வழங்கப்பட்டது. பேரூராட்சி மூலம் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றது. இதில் கதிர்வேல் சைய்யத் அலி, அப்துல சமத் சாதிக் பாஷா, சாகுல் அப்துல்லா உட்பட பலரும் மருத்துவ துறை ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு