திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 2-ந் தேதி (திங்கள்கிழமை) அனைத்து விதமான ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது. மேற்கண்ட கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா