மதுரை : சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் டாக்டர் மருது பாண்டியன் சோழவந்தான் லயன்ஸ் கிளப் தலைவராக உள்ளார். இவர் பதவியேற்ற நாள் முதல் இப்பகுதியில் பொதுமக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறார். இதனால் மீண்டும் இரண்டாவது ஆண்டாக லயன்ஸ் கிளப் தலைவராக மருது பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது 8வது வார்டில் இரட்டை அக்ரஹாரம் பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதனால் சில சிறார்கள் கிருஷ்ணன் கோவில் பின்புறம் முன்புறம் பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்து வருவதாக கவுன்சிலர் மருதுபாண்டியனிடம் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் கிருஷ்ணன் கோவில் பின்புறம் மற்றும் முன்புறத்தில் டாக்டர் மருதுபாண்டியன் சார்பாக சொந்த செலவில் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இது மட்டுமல்லாது இவர் வார்டு பகுதியில் உள்ள சாலை கருப்பசாமி கோவில் அருகில் உள்ள அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வந்தனர். இது குறித்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அப்பகுதி சுத்தம் செய்து மீண்டும் குப்பைகள் கொட்டாதவாறு நடவடிக்கை மேற்கொண்ட கவுன்சிலர் மருதுபாண்டியன் அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
இப்பகுதியில் மாணவ, மாணவிகளை கேலி கிண்டல் செய்யாதவாறு சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தியும் இங்குள்ள கோவில் பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க மரக்கன்றுகள் நட்டும் நடவடிக்கை மேற்கோண்ட வார்டு கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியனை வார்டு பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர். இதற்கான விழா இங்குள்ள கிருஷ்ணன் கோவில் முன்பாக நடந்தது. இவ்விழாவிற்கு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க சோழவந்தான் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மகளிர் குழு சொர்ணம் ,கோதை, பாமா ,நல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிட்டு வரவேற்றார் கோவில் அர்ச்சகர் கண்ணபிரான் பிரசாந்த் சர்மா ஆகியோர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்கள். ராமநவமி கமிட்டி நிர்வாகி காசி, விஸ்வநாதன், ஐயப்ப, சேவா சங்கத்தின் செயலாளர் தாமோதரன், கணேசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கவுன்சிலர் மருதுபாண்டியனை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தனர். கணேசன் நன்றி கூறினார் இதை தொடர்ந்து அந்த வார்டு பகுதி மக்கள் இப்பகுதியில் செய்ய வேண்டிய பணிகளை கோரிக்கையாக கூறினார்கள். இது போன்று செயல்கள் அனைத்து வார்டு பகுதியிலும் நடைபெற வேண்டும் என்று அந்தந்த வார்டு பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி