தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 30 பேர் வரையில் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னையிலும் டெங்கு காய்சல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் டெங்கு பாதிப்பு குறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் மக்களிடம் நேரடியாக ஆய்வு செய்து வந்தார். மேலும், பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று தண்ணீர் தேங்காமல் தடுப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து தொடர் ஆலோசனை வழங்கி வந்தார். டெங்கு விழிப்புணர்வு மட்டுமின்றி சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் பணி என காலை முதல் இரவு வரையில் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று தொடர் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். கூடுதல் முதன்மைச் செயலாளர் உயர்திரு டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் அவர்கள் பூரணம் நலம் பெற்று மக்கள் சேவையை தொடர்ந்து செய்ய இறைவனிடம் பிராத்திக்கின்றோம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி