திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதி மசூதி எதிரே மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கமல் தலைமை வகித்தார். அப்ரார் அஹமது முன்னிலை வகித்தார், அன்சார் பாஷா அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் முகமது அளருதீன், இந்திய மாணவர் தலைவர் பஷீர் அகமது, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நடைபெற்று வரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் அதனுடன் சண்டையிடும் இஸ்ரேலை கண்டித்தும் கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் ஷேக்அகமது, அரியன் வாயில் பகுதி வார்டு உறுப்பினர் அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு