திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு அரியன் வாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம். முகாம் ஏற்பாடுகளை மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் அபூபக்கர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார் இதில் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகவரி மாற்றம் கைப்பேசி எண் இணைப்பு பணிகள் நடைபெற்றது.74 பயணாளிகள் பயன் பெற்றனர். இதில் கிராம நிர்வாக அதிகாரி அம்சா உதவியாளர் புவனா அரியன்வாயல் தி.மு.க வார்டு செயலாளர் அனஸ் பாய் வார்டு சபை உறுப்பினர்கள் சைய்யது அலி சாதிக் மஜக மாவட்ட செயலாளர் கமால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு