கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து 10.000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து செயல்பட்டு முகாம் நடைப்பெற்றது. இந்த முகாம்மில் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் திருமதி. வந்தனா கார்க் இ.ஆ.ப., அவர்கள், மற்றும் ஓசூர் சட்ட மன்ற உறுப்பினர் Y. பிராகஷ் மற்றும் மேயர் சத்யா அவர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டு. தனியார் நிறுவன வேலை வாய்ப்பு முகாம்மில் கலந்து கொண்ட நபர்களுக்கு பணி நியமன சான்றிதழ் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்