சிவகங்கை : சிவகங்கை, காரைக்குடியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை பிசிக் அலையன்ஸ் தலைவர் பிரபு, துணைதலைவர் ராமசாமி, பொது செயலாளர் கார்த்திகேயன், திருப்பதி, பொருளாளர் காளிதாஸ், சட்ட ஆலோசகர் கமல் தயாளன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாடி பில்டிங், என பல வகை போட்டிகள் நடந்தது. மாற்றுத்திறனாளி பிரிவு, (40). வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 75,65, 60, 55 உட்பட எடைவாரியாகவும் போட்டிகள் நடந்தது. சென்னை, வேலூர், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கட்டுடலை காட்டி அசத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் பில்டிங் டைட்டிலை சென்னையைச் சேர்ந்த ராகேஷ், கிளாசிக் பிசிக்ஸ் டைட்டிலை சென்னையைச் சேர்ந்த ஜாம்மி, மென்ஸ் பிசிக்ஸ் டைப்பிங் ஜாம்மி பெற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி