திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் 150 கர்பிணி தாய்மார்களுக்கு சமுதாய பாதுகாப்பு விழா மீஞ்சூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மீஞ்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழச்சிக்கு மீஞ்சூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கா.ஞானமணி தலைமை தாங்கினார். மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களை வாழ்த்தி பேசி வளைகாப்பை துவக்கி வைத்தார்.150 கர்ப்பிணிகளுக்கும் அவர்களின், உறவினர்களின் முன்பு சீர்வரிசைகளோடு சந்தனம் திலகமிட்டு மாலை அணிவித்து வலையள் போடப்பட்டு வயிறார உணவும் வழங்கப்பட்டது.
இதில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர், வார்டு கவுன்சிலர் அபூபக்கர்,ஒன்றிய கவுன்சிலர்கள் தன்சிங்,அன்பு, நாலூர் எம் கே சகாதேவன், நந்தியம் கதிரவன், மீஞ்சூர் கிழக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், வல்லூர் நந்தாகுமார், மேற்பார்வையாளர்கள் ஜ .முனாராணி, வள்ளி, அருள்மொழி, சுகுணா, கீதா, சுமதி, சசிகலா, திருபூரணி, எஸ்தர், ஒருங்கிணைப்பாளர் சுசிதா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு