திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் புதிதாக ஒரு கோடி 36 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை தார் சாலை கான்கிரீட் சாலை பூங்கா போன்றவற்றை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பணிகள் முறையாக செய்யப்படாததை விரைந்துமுடிக்க பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு மற்றும் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் அவர்களை, அறிவுறுத்தினார். இதில் பேரூராட்சி உதவி இயக்குனர் லதா, இளநிலை பொறியாளர் சதீஷ், மீஞ்சூர் பேரூராட்சி செயலாளர் வெற்றியரசு, மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர், வார்டு கவுன்சிலர்கள் அபூபக்கர் ஜெயலட்சுமி ஜெய்சங்கர் ஆவின் வெங்கடேசன் ரஜினி ஜெயலட்சுமி தன்ராஜ் மீஞ்சூர் பேரூராட்சி இளநிலை பொறியாளர் அன்பரசு மேற்பார்வையாளர் கோபி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு