செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் சீனிவாசன் அவர்கள் தனது இரு சக்கர வாகனத்தில் காரைக்குடி – தேவகோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டு கால் முறிந்து காயத்துடன் எழுந்து நடக்க முடியாமல் அமர்ந்திருந்தபொழுது அவ்வழியே வந்த சிவகங்கை அ.இ.அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான திரு.PR.செந்தில்நாதன் அவர்கள் காயமடைந்த சீனிவாசன் அவர்களை மீட்டு தனது காரில் ஏற்றி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து மருத்துவர்களிடம் தக்க சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி