சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட திருவள்ளூர் வடக்கு குடியிருப்பில் அமைந்திருக்க கூடிய தற்காலிகமாக இயங்கும் அங்கன்வாடி கட்டிடத்திற்குள் எலிகள் அதிகமாக வந்து விடுவதாலும், அங்கன்வாடி மையத்திற்கு அருகில் டீக்கடை இருப்பதால் டீ குடிக்க வர கூடிய பொதுமக்கள் அங்கன்வாடி கட்டிடத்திற்கு அருகில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது, ஆகவே குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தி அங்கன்வாடி கட்டிடத்தை மாற்றி அமைக்க கோரி திருவள்ளூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் மனோஜ் அவர்கள் மனு கொடுத்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.முகமது அஸ்லாம்