மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவை சத்தியமூர்த்திநகரில் உள்ள அரசு ஆரம்பசுகாதாரநிலையத்திற்கு பரவை ஜி.எச்.சி.எல்., சமூக அறக்கட்டளை சார்பாக ரூ.1.5லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கிய பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை மாவட்ட துணை இயக்குநர் டாக்டர் குமரகுருபரனிடம் அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் அறுவைசிகிச்சை
உபகரணங்கள், குளிர்பதனபெட்டி, டெங்கு புகை மருந்து தெளிப்பான்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். அதை பெற்றுக்கொண்டு, மாவட்ட துணை இயக்குநர் குமரகுருபரன் பேசியதாவது பரவை ஜி.எச்.சி.எல்.,சமூக அறக்கட்டளை இதுவரை மருத்துவ
முகாம்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கருத்தரங்குகள், கல்வி
மேம்பாட்டுபணிகள், நலந்தோர் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் என்று எண்ணில்லா சமூக பணிகள் தொடந்து செய்து வருகிறது.
அந்த வரிசையில் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில்,உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்போது ரூ.1.5லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களும், குளிர்பதன பெட்டியும், தற்போது, பருவமழை தொடங்குவதையொட்டி, டெங்கு பாதிப்புகளை கட்டுபடுத்தும் விதத்தில் கொசு மருந்து அடிப்படிதற்கு மருந்து தெளிப்பான் கருவிகள் என்று வழங்கியுள்ளது. இந்த சமூக பணியால், கிராம பொதுமக்களுக்கு பெரும் பயனடைவார்கள் இதுபோன்று சமூக
அக்கறையோடு உதவும் எண்ணத்தை தூண்டும் விதமாக மேலும், பல உதவிகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், வட்டார சுகாதர
மருத்துவ அலுவலர் வரலெட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லையா, உதவிமருத்துவர் அருணா, துணை பொது மேலாளர் அசோக்குமார், சமூக
பொறுப்பு அலுவலர் சுஜின்தர்மராஜ் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி