மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அளவில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, தமிழக அரசின் கலைத்திருவிழா வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் உள்ள வட்டார வளமையத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு, கவுன்சிலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் இனிகோ எட்வர்ட் ராஜா, திலகவதி, விஜயகுமார், மலர்விழி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய பொறுப்பாளர் மேற்பார்வையாளர் கலைச்செல்வி வரவேற்றார். இந்த போட்டிகளை, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் வாசுகி தொடங்கி வைத்தார்.
இதில், வாடிப்பட்டி ஒன்றியஅளவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை, நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக கருவிஇசை, கிராமியநடனம், வில்லுப்பாட்டு, பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, நாடகம், குழுநடனம், இசைசங்கமம், பலகுரல், வண்ணம் தீட்டுதல், கேலிசித்திரம், வரைந்துவண்ணம் தீட்டுதல், தலைப்பை ஒட்டிவரைதல், கையொழுத்துபோட்டி, புகைப்படம் எடுத்தல், கலிமண்பொம்மைசெய்தல் உள்ளிட்டவைகளில் பங்கெடுத்து கைவண்ணம் மற்றும் சுயசிந்தனை, மொழி அறிவு கலைத்திறனை வெளிப்படுத்தி படைப்புகளை உருவாக்கினர்.
இந்த போட்டிகள் நடத்தப்படுவதன் முக்கியத்துவம் பற்றி வட்டாரக்கல்வி
அலுவலர்கள் அகிலத்து இளவரசி, ஜாஷகான் ஆகியோர் விளக்கிபேசினர். உதவி
தலைமை ஆசிரியர் விஜயரங்கன் தொகுத்து வழங்கினார்.
முடிவில், ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றிகூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி