சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில், ஆயுத பூஜையை முன்னிட்டு வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சீருடை வழங்கினார். திருப்புத்தூரில் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கி வருகிறார். அதே போன்று 19 வது வருடமாக இந்த ஆண்டும் ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கினார். திருப்புத்தூர் பேருந்து நிலையம் எதிர்புறம், காந்தி சிலை எதிர்புறம், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் ஆட்டோ நிலையம், நான்கு ரோடு வேன் நிலையம், அண்ணாசிலை, கல்லுவெட்டுமேடு பகுதிகளில் உள்ள ஆட்டோ, கார், ஏசி, சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம், 108 ஆம்புலன்ஸ், தண்ணீர் வண்டி ஓட்டுநர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 3500 ஓட்டுனர்களுக்கு இந்த சீருடையை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் பெரியகருப்பனுக்கு அச்சங்கத்தினர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். உடன் இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட அணி தி.மு.க செயலாளர் ராஜ்குமார் அவர்கள், மற்றும் தி.மு.க ஒன்றிய செயலாளரும், திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான சண்முக வடிவேல், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி நாராயணன், பேரூராட்சி துணை சேர்மன் கான்முகமது, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் நாராயணன், நகர துணைச் செயலாளர் உதய சண்முகம், முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், ஒன்றிய பொருளாளர் கண்ணன்,
மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீமான் சுப்பையா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முகமது கனி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பூக்கடை பாண்டியன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.புதூர் கண்ணன், நகர பொருளாளர் சி.பி.எம் பிச்சை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மாறன், கண்டவரயான்பட்டி ஒய்க்கா சோமசுந்தரம், 14 வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் பசீர் அகமது, 2வது வார்டு கவுன்சிலர் நேரு, 18 வது வார்டு கவுன்சிலர் பாண்டியன், நகர விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் ஹரி, தொ.மு.ச சண்முகநாதன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அபுதாஹீர், கழக பேச்சாளர் ஷாஜகான், நகர அவை தலைவர் இராம ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் பார்த்தசாரதி, சிங்கம்புணரி ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், 14வது வார்டு செயலாளர் ஸ்டீபன், 15வது வார்டு செயலாளர் ஹலோ குமார், வெள்ளைச்சாமி, பேட்டை கண்ணன், அம்மன் ஹோட்டல் செல்வம், பிள்ளையார்பட்டி சதீஷ், உள்ளிட்ட தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி