திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெற்றியரசு துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் வளர்ச்சி பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் துரைவேல், பாண்டியன், ரஜினி, பாஸ்க,ர் அபூபக்கர், நக்கீரன், பரிமளா, அருண்குமார், சுமதி, தமிழ் உதயன், ஜெயலட்சுமி, தன்ராஜ், சுகன்யா, குமாரி, புகழேந்தி, ஜெயலட்சுமி, ஜெய்சங்கர்,
மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு