சிவகங்கை : இந்திய தேரதல் ஆணையம் அறிவுரைப்படி (01.01.2024)-ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024-க்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலினை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (27.10.2023) அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்.தி.ஆ.ப. அவர்கள், வெளியிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.மோகனச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி கு.சுகிதா (சிவகங்கை), திரு.சோ.பால்துரை (தேவகோட்டை), தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அமேசியாதாஸ், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், துணை வட்டாட்சியர் (தேர்தல்). அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உட்பட பலர் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி