திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்தாலம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு புதிய அறங்காவலராக A. C .ராஜேந்திரன் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டார். கோவில் அருகே அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் அனுப்பம்பட்டு ரமேஷ் வரவேற்பு அளித்தார். மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மொழிப்போர் தியாகி டாக்டர் கா.சு. ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், வழக்கறிஞர் ஏ .கே. சுரேஷ், தி.மு.க கிளை செயலாளர்கள் மொழிப்போர் தியாகி மணி, சேகர், ரகு, கருணாநிதி, பவுன்ராஜ், வெங்கடேசன், மாவட்ட துணை அமைப்பாளர் அனுப்பப்பட்டு தேவராஜ், ருக்குமானாந்தன், ஹேமச்சந்திரன், ராயப்பன், கார்த்திக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பாராட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் காங்கிரஸ் மாவட்ட தலைவரும் பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு அறங்காவலரை பாராட்டி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா சங்கர் ராஜா, தி.மு.க மாவட்டத் துணை அமைப்பாளர்கள் காட்டூர் ராஜேஷ் ,திரு வெள்ளைவாயல் ஹரி , ஆலாடு அமுதா, மற்றும் மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு நிர்வாகிகள், அனுப்பப்பட்டு கிராம பொதுமக்கள், மகளிர் குழுக்கள், இளைஞர்கள், கோவில் நிர்வாகிகள், கிராம பெரியோர்கள், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு