சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள்,
மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் / தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் திரு.வாகை சந்திரசேகர் அவர்கள், ஆகியோர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில், கலைத் திருவிழா நிகழ்ச்சியினை, நேற்றைய தினம் (29.10.2023), காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைக் குழுவினர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.சோ.பால்துரை, தேவகோட்டை உட்கோட்டம் காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, சிவகங்கை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். சண்முகசுந்தரம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வம் மற்றும் செய்தி துறை அலுவலர்கள் பாரி, மகேந்திரன், மஞ்சு நாதன், குமார் மற்றும் காரைக்குடி நகர்மன்ற துணைத் தலைவர் திரு.ந.குணசேகரன், தமிழ்நாடு இயல் இசை நாடக கலைஞர்கள் பேரவையின் மாநில தலைவர் திரு. பாலசுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் திரு.சோமசுந்தரம், சிவகங்கை மாவட்டம் இயல் இசை நாடகம் பொறுப்பாளர்கள் காந்தி, கண்ணன், ஆறுமுகம் மற்றும் நாடக கலைக்குழுவினர் உட்பட பலர் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி