சிவகங்கை : இந்தியா சுதந்திர போராட்டத்திற்காக முக்கிய பங்கு வகித்த சிவகங்கை சீமை மருதுபாண்டியர்களின் நினைவு போற்றும் வகையில் சென்னையில் வெண்கல சிலை வைப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதேபோன்று சிவகங்கையிலும் வெண்கல சிலை வைப்பதற்கு சிவகங்கை நகராட்சி ஆணை பிறப்பித்துள்ளது. (தீர்மானம் எண் 202) சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கும் மருதுபாண்டியர்களின் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழக அரசிடம் மருது பாண்டியர்களின் வாரிசுமான, சிவகங்கை தி.மு.க நகர் செயலாளரும்,சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி