திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மீஞ்சூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல் பங்க் அருகில் இந்திரா காந்தி நினைவை போற்றும் வகையில் அவர்களது திருவுருவ படத்தினை நிறுவி படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வினை மீஞ்சூர் நகரத் தலைவர் கா.அரவிந்த் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்வில் ராகுல் காந்தி பேரவை தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் டில்லி பாபு, மாவட்ட துணைத் தலைவர்கள் அன்பரசு நந்தியம் சக்கரவர்த்தி சுகுமார் சீமாவரம் கோவிந்தராஜ் , ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் முகமது தாரிக் மாவட்ட பொதுச் செயலாளர் சித்திக் பாஷா முகமது அல்தாப், மாவட்ட செயலாளர்கள் நாலு சிலம்பரசன் நெய்தவயால் வினோத் சீமாவரம் சதீஷ், முன்னாள் நகர பொருளாளர் மஜித், முன்னாள் நகர நிர்வாகி மகாலிங்கம், உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு