சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி போன்ற சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் பெருந்திரளாக அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொள்வர். இக்கூட்ட வாயிலாக விவசாயிகள் தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து தீர்வு காண்பது வழக்கம் (31/10/2023) அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருகை புரிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பி .ஆர். செந்தில்நாதன் மதிய உணவு அளித்து விவசாயிகளை மகிழ்வித்தார். கடந்த குறை தீர் கூட்டத்தில் (லெமன், புளியோதரை, தயிர் சாதம்) வழங்கினார். இந்த முறை சாப்பாடு முட்டை மூன்று வகை காய்கறிகள், தண்ணீர் கேன் வழங்கினார். அனைத்து விவசாயிகளும் மதிய உணவு அருந்தினர். நாட்டு உணவு மக்களுக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு உணவு அளித்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு செந்தில்நாதனுக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி