கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு (22. 11. 2023)அன்று வருகை புரிவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில், இன்று (01. 11. 2023) நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப.,ஓசூர் எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் இ. கா. ப., ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி. சினேகா இ. ஆ, ப. மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்