திருவள்ளூர் : தமிழக முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் நீக்குதல் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவை வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் மீஞ்சூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ள அரசு பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் பெயர் சேர்த்தல் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது . இந்த முகாமை அ.தி.மு.க மாவட்ட செயலாளர் முன்னாள் பொன்னேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருமான பி. பலராமன் நேரில் சென்று முகாமை பார்வையிட்டார். அப்பொழுது முகாமில் இருந்த முகவர்களிடம் வாக்காளர் பட்டியலை பற்றி கேட்டு அறிந்தார். அருகில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் நாலூர் முத்துக்குமார் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன், துணைச் செயலாளர் எம்.வி.எஸ். தமிழரசன், மீஞ்சூர் வழக்கறிஞர் மாரி, மீஞ்சூர் பேரூராட்சி 18 வார்டு கவுன்சிலர் ராஜன், மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு