சேலம் : நவ 06 – லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் ஆலோசனைக் கூட்டம் சேலம் லாரி அசோசியேசன் சங்க கட்டிடத்தில் மாநிலத் தலைவர் தனராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மணல் லாரி உரிமையாளர் சங்கம் , சரக்கு போக்குவரத்தாளர் நல சங்கம், பாடி பில்டர் அசோசியேஷன், மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம், வேன் லாரி உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு புக்கிங் ஏஜென்ட் சம்மேளனம் உட்பட பல்வேறு சரக்கு போக்குவரத்தாளர்கள் கலந்து கொண்டனர். இதில் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் தனராஜ் கூறியதாவது மாநில அளவிலான ஒரு நாள் அடையாள முழு அடைப்பிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் நவம்பர் 9ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 6 1/2 லட்சம் கனரக மற்றும் 25 லட்சம் இலகு ரக வாகனங்களை மாநில எல்லைகளில் நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதனால் 5000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் எனவும் 200 கோடி ரூபாய் வாடகை இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும் காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இலகு மற்றும் கனரக வாகனங்களின் மீது ஆன்லைன் கேஸ் போடுவதை நிறுத்த வேண்டும், தமிழக அரசு மணல் குவாரிகளை திறந்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அனைவரும் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் செயலாளர் குமார், பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் ரகுநாதன் உட்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.T. லாரன்ஸ்
Tags: Salem