விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அட்சய கரங்கள் சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு, அட்சய கரங்கள் நிறுவனர் சதுரகிரி தலைமை வகித்தார். தியாகம் அறக்கட்டளை நிறுவனர் அமுத சாந்தி வரவேற்றார். காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர். கே செந்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி மற்றும் புத்தாடைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் , ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவகுமார், ஆத்மா வேளாண் குழு தலைவர் கந்தசாமி, இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார், கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம், காரியாபட்டி வழக்கறிஞர் சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் அட்சய கரங்கள் சட்ட ஆலோசகர் தர்மராஜ், கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் விஷ்வா தன்னார்வ தொண்டர்கள் பாலமுருகன், பழனி, கர்த்தவர்ணம், காளீஸ்வரி, கார்த்திக், ஆகியோர் கலந்துகொண்டர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி