மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இந்த அணையின் நீர்மட்டம் கொள்ளளவு 29 அடி ஆகும். கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமானது முதல் கனத்த மழைவரை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, தற்போது, நேற்று மாலை நிலவரப்படி 22 அடி நீர் மட்டம் வரை உள்ளது. தொடர்ந்து, மழை பெய்தால் சில நாட்களில் அணை நிரம்புவதற்கு வாய்ப்பு வரும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால்,இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி