தேனி :தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 70.51 அடியை எட்டியது. இந்த நிலையில் மதுரை திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்துபெரியார் பாசன பகுதியில் உள்ள இருபோக சாகுபடி நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக வினாடிக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் இதன் மூலம் மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள
45 ஆயிரத்து 41 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது