சிவகங்கை : சிவகங்கையில் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக 7வது வார்டில் மழைநீர் தேங்கியுள்ளதை அப்புறப்படுத்தும் பணியை சிவகங்கை நகர மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள், பார்வையிட்டு மழைநீரை வெளியேற்றும் பணியினை துரிதமாக நடைபெற உத்தரவிட்டார். உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், வீனஸ் ராமநாதன், காந்தி, ராமதாஸ், கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி