தேனி : தேனி மாவட்டம், பெரியகுளம் செல்வதற்காக சென்னையிலிருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான 10 சதவீத போனஸ் குறித்த கேள்விக்கு
கூட்டுறவுத்துறை என்பது மிகவும் முக்கியமான, மத்திய அரசின் பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்குகின்ற ஒரு துறை, மக்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம், அதை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சாதிய வன்கொடுமை பிரச்சனைகள் ஒருபுறம் நடைபெறுகிற போது தமிழக அரசு நீட்டுக்கு எதிரான கையெழுத்து குறித்த கேள்விக்கு ஜாதியை கொடுமைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் அடித்தளமான கருத்து நீட்டுக்கும் இதற்கும் முடிச்சு போடுவது சரியல்ல, நீட்டு தமிழகத்திற்கு தேவையில்லாதது ஒன்றுதான் என்பது எப்போதும் எங்களின் கருத்து. காங்கிரஸ் குறித்து பிரதமரின் பகிரங்க குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு இந்தியாவுடன் வெளிநாட்டவர்கள் கைகோர்த்து இருந்தால் நல்ல செயல்களுக்கு கைகோர்த்தால் வரவேற்போம் தீய செயல்களுக்கு கைகோர்த்தால் அதை எதிர்ப்போம்.
உயர்நீதிமன்ற வழக்கு குறித்த கேள்விக்கு இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி