திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி வேளாளர் தெருவில் புதிய உடற்பயிற்சி கூடம் நவீன கருவிகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டு இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. மீஞ்சூர் லட்சுமிபதி என்பவருக்கு சொந்தமான இந்த உடற்பயிற்சி கூடத்தினை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை. சந்திரசேகர் மற்றும் திரைப்பட நடிகர் சாய் தீனா ஆகியோர் திறந்து வைத்தனர். குத்து விளக்கு ஏற்றி உடற்பயிற்சி கூடத்தினை பார்வையிட்டு உடற்பயிற்சி கருவிகளை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து பயிற்சியாளர்களிடம் கேட்டறிந்தனர்.மேலும் அனைவரையும் அசத்தும் விதத்தில் மிஸ்டர் சவுத் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு ஆணழகன்கள் தங்கள் உடல் திறமைகளை காண்பித்து அசத்தினர். அவர்களுக்கு பொன்னேரி சட்டமன்ற துரை சந்திரசேகர் மற்றும் திரைப்பட நடிகர் சாய் தீனா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடி பில்டிங் வெல்பர் சொஷைட்டி மாநிலச் செயலாளர் மற்றும் முன்னாள் மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் ஆசியா நாகேஷ் பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி,கும்மிடிப்பூண்டி தி.மு.க ஒன்றியக் கழக செயலாளர் மணிபாலன், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பா.அலெக்சாண்டர், மீஞ்சூர் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளான மீ.வி.கோதண்டம், செந்தமிழ் சசி,A.K.சுரேஷ், மீஞ்சூர் கண்ணாடி A.C.ராஜேந்திரன், மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஜோதிலட்சுமி மோகன், பாஸ்கர், அபூபக்கர், வழக்கறிஞர் M.D. சுதாகர், வழக்கறிஞர் உதயா, மீஞ்சூர் காங்கிரஸ் நகர தலைவர் கா. அரவிந்தன், தேவராஜ், கார்த்திக், ஜோதி அக்கா, கிட்டு என்ற கவியரசு, ஆண்ட்ரூஸ்,குரு சாலமோன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தேவன், கபீர் ,தேசிய குத்துச்சண்டை வீரர்கள் கரிகாலன், திவாரி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு