விருதுநகர் : காரியாபட்டி ஒன்றியத்தில், 10, ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டத்தை காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் சார்பாக துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகள், மரம் வளர்ப்பு, இல்லங்கள் தோறும் தென்னை மற்றும் மாமரக்கன்றுகள் வழங்குதல் குருங்காடுகள் அமைத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. பனைமரம் பாதுகாப்பு அழிந்து வரும் நமது பாரம்பரிய பனைமரங்களை காப்பாற்ற வேண்டும். கண்மாய்,
குளங்கள சாலை ஓரங்களில் பனைவிதை நடும் திட்டத்தை கிரீன் பவுண்டேசன் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மழைக்காலத்தில் கண்மாய் ஊரணி, நிரம்பி செழிப்பாக இருக்கும் நேரத்தில பனைவிதைகள நடும் திட்டத்தை கரிசல்குளம் கிராம ஊரணி கரையில் பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காரியாபட்டி யூனியன் அனைத்து கிராமங்களிலும் 10, ஆயிரம் பனை விதைகள நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். என்று கிரீன் பவுண்டேசன நிர்வாகி பொன்ராம் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி