திருவள்ளூர் : அறிவியல் மன்றம் துவக்க காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் தீர்மானம்.
மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் காயிதே மில்லத் அறக்கட்டளை இளைஞர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஆலோசனை கூட்டம் தலைவர் சாதிக்பாஷா தலைமையில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பிறந்தநாளில் நினைவு கூறப்பட்டது.மேலும் மாணவர்களிடையை அறிவியல் மனப்பான்யை வளர்த்தெடுக்கும் வகையில் காயிதே மில்லத் அறிவியல் மன்றம் துவக்கப்பட்டு மாணவர்களின் ஆராய்ச்சிகளிலும் புதிய கண்டுபடிப்புகளிலும் ஊக்கப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அறக்கட்டளை செயலாளர் சாதிக்பாஷா பொருளார் பசிர் நிர்வாகிகள் அபுபக்கர் காஜா அப்துல்லா பாபுலால் அப்துல் சமத் ஹிதாயத்துல்லா ஹபிப் முகமது பத்தாஹ் கறிமுல்லா அசாருத்தின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு