கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே, மழையால் நிரம்பும் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது- கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர். தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை ஒட்டி, கடலோர மாவட்டங்களில் உள்ள 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்கள் மற்றும் 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தூத்துக்குடியில் 2, திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டனத்தில் தலா ஒன்று என நான்கு குடிசை வீடுகள் நேற்று பெய்த மழையால் சேதமடைந்துள்ளன. கனமழையால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.